படப்பிடிப்பில் ஹீரோ-ஹீரோயின் காயம்!இயக்குநரும் நடிகருமான ஜோதி கிருஷ்ணா மற்றும் நடிகை பிரீத்தி பண்டாரி ஆகியோர் ஊலலல்லா படப்பிடிப்பில் காயமடைந்தார்.

பிரபல பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. எனக்கு 20 உனக்கு 18 படத்தை இயக்கியவர் இவர்தான். தமன்னா, இலியானா, ஸ்ரேயா என முன்னணி நாயகிகளை அறிமுகப்படுதிதியவர்.

இப்போது ஊலலல்லா என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த பிரீத்தி பண்டாரி நடிக்கிறார்.

இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வது போலவும், அந்தரத்தில் பறந்தபடி கீழே இறங்குவது போலவும் ஒரு காட்சியை, சென்னை திரைப்பட நகரில் நேற்று படமாக்கினார்கள். இதற்காக மோட்டார் சைக்கிளின் இருபுறமும் கயிறு கட்டப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கயிறு அறுந்ததால் ஜோதி கிருஷ்ணாவும், பிரீத்தி பண்டாரியும் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

Comments

Most Recent