மன உளைச்சலில் தவிக்கிறேன் - நயனதாரா



என்னைச் சுற்றிலும் பிரச்சினைமயமாகி விட்டதால், மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,

நான் பத்திரிகையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை என்று கூறுகின்றனர். பேச என்னிடம் எதுவும் இல்லாததால் ஒதுங்கி இருக்கிறேன்.

இந்த வருடத்தை பொறுத்த வரை எனக்கு சிறந்த வருடமாகதுவங்கியுள்ளது. அடூர்ஸ் தெலுங்கு படம் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறேன். பாடி கார்டு படமும் வெற்றி பெறும்.

சொந்த வாழ்விலும் திரையுலக வாழ்விலும் நிறைய பிரச்சினைகளில் சிக்கினேன். பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை.

எங்கே போனாலும் முதலில் கேட்கிற கேள்வி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்ரியதாகவே உள்ளது. இதை நான் விரும்பவில்லை... அது எதற்கு பத்திரிகையாளர்களுக்கு?" என்கிறார் வேகமாக.

Comments

Most Recent