கையிலிருக்கிற படங்களை முடித்தால் போதும். புதுப்படங்களை ஒப்புக் கொள்ளவேண்டாம் என்று தாயார் உமா கிருஷ்ணன் சொல்லிவிட்டதால், படங்களை முடித்துக் ...
கையிலிருக்கிற படங்களை முடித்தால் போதும். புதுப்படங்களை ஒப்புக் கொள்ளவேண்டாம் என்று தாயார் உமா கிருஷ்ணன் சொல்லிவிட்டதால், படங்களை முடித்துக் கொடுப்பதில் மும்முரம் காட்டுகிறாராம் த்ரிஷா.
காரணம்?
கல்யாணம்தான். த்ரிஷாவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளாராம் அவரது அம்மா உமா. த்ரிஷா ஜாதகத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் கொடுத்து பொருத்தமான வரன் பார்த்து வருகிறார்.
இப்போது இந்தியில் த்ரிஷா நடிக்கும் கட்டா மிட்டா மற்றும் தமிழில் கமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் படம் தவிர வேறு படங்களில் நடிக்க மாட்டாராம்.
அநேகமாக கமல் படம் துவங்கும்போதே த்ரிஷா நிச்சயதார்த்தம் நடக்கும் என்று உமா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கமல் படம் முடிந்ததும் கல்யாணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளாராம்.
தாயாரின் இந்த முடிவுக்கு அரை குறை மனசோடு சம்மதம் சொல்லியிருக்கிறாம் த்ரிஷா. எப்படியாவது அம்மா மனதை மாற்றவும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
இன்றும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளவர் த்ரிஷா.
1999-ம் ஆண்டு லேசா லேசா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த 10 ஆண்டுகளில் சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும் என பல ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் தென்னிந்திய நடிகை த்ரிஷாதான்!
Comments
Post a Comment