மல்லிகா ஷெராவத்தும், ஜீனத் அமனும்அந்தக் காலத்து கவர்ச்சி பிரளயம் ஜீனத் அமன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்தக் காலத்தின் கவர்ச்சு சுனாமி மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து புதிய இந்திப் படத்தில் நடித்துள்ளார் ஜீனத்.

கவர்ச்சி அம்மனாக எழுபதுகளிலும், 80களின் தொடக்கத்திலும் பாலிவுட்டைக் கலக்கியவர் ஜீனத் அம்மன். இவர் நடித்த குர்பானி, சத்யம் சிவம் சுந்தரம், டான், ஷாலிமார் உள்ளிட்ட படங்கள் வெகு பிரபலமானவை, சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை.

கவர்ச்சிகரமான நாயகியாக அறியப்பட்ட ஜீனத் அமன் பின்னர் திருமணம், குடும்பம் என ஒதுங்கி விட்டார். இப்போது 60 வயதுகளில் இருக்கும் ஜீனத் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ரன்வீர் ஷோரி, மல்லிகா ஷெராவத் இணைந்து நடிக்கும் படத்தில் ஜீனத் அமன் நடித்துள்ளார். எப்படி அந்தக் காலத்தில் கவர்ச்சிப் புயலாக ஜீனத் விளங்கினாரோ அப்படி இப்போது இருப்பவர் மல்லிகா ஷெராவத். எனவே இந்தப் படம் இந்தி ரசிகர்களிடையே ஒரு க்யூரியாசிட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நடித்தது இனிய அனுபவம் என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஜீனத் தொடர்ந்து நல்ல வேடங்களாக வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார்.

Comments

Most Recent