கேரளாவில் பிறந்த நாளை கொண்டாடிய வித்யா பாலன்



பா படத்தின் வெற்றியின் மூலம் பெரும் குஷியில் மூழ்கியுள்ள வித்யா பாலன் தனது பிறந்த நாளை கேரளாவில் சத்தம் போடாமல் ஜாலியாக கொண்டாடியுள்ளார்.

பா படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வித்யாபாலன் அசத்தலாக நடித்திருந்தார். இந்த கேரக்டருக்குக் கிடைத்த பாராட்டுகளும், வரவேற்பும் வித்யாவை குஷியாக்கியுள்ளது.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை கேரளாவில் கொண்டாடினார் வித்யா.

ஜனவரி 1ம் தேதிதான் வித்யா பாலனின் பிறந்த நாள். இந்த ஆண்டு அவருக்கு 32வது பிறந்த நாளாகும். இதையடுத்து தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா பகுதியில் பிறந்த நாளை கொண்டாடினாராம் வித்யா.

இந்த கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன், மிக மிக நெருங்கிய சிலரை மட்டுமே கலந்து கொள்ள அழைத்திருந்தாராம் வித்யா. சூப்பர் விருந்து, இசை நிகழ்ச்சிகள் என அமர்க்களமாக இருந்ததாம் பிறந்த நாள் கொண்டாட்டம்.

பா படத்தில் அம்மாவாக வந்து அசத்திய வித்யா பாலன், அடுத்து இஸ்கியா படத்தில் கவர்ச்சியால் மயக்கும் வில்லத்தனமான கேரக்டரில் கலக்குகிறார் என்பது நினைவிருக்கலாம். இதில் நசிருதீன் ஷா, அர்ஷத் வர்சி ஆகியோர் உள்ளனர்.

Comments

Most Recent