ரீம்மா, ஷ்ரியாவுக்கு கடைசி சான்ஸ் ஆக அவர்கள் நாயகிகளாக நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குட்டி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களி...
ரீம்மா, ஷ்ரியாவுக்கு கடைசி சான்ஸ் ஆக அவர்கள் நாயகிகளாக நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குட்டி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களின் வெற்றியைப் பொறுத்துதான் இருவருக்கும் கோலிவுட்டில் எதிர்காலம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரிய வரும்.
ரீம்மாவும், ஷ்ரியாவும் ஹிட் நாயகிகளாக முன்பு வலம் வந்தவர்கள். ஆனால் போகப் போக தேய் பிறையாகி விட்டனர்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து வந்ததாலும், அந்தப் படம் ரொம்பத் தாமதமாக வளர்ந்து வந்ததாலும் ரீம்மா வேறு படத்தில் நடிக்காமல் கடந்த 2 வருடங்களாக ஒருவனிலேயே முடங்கிப் போயிருந்தார்.
ஷ்ரியாவிடம் இருந்த ஒரே படம் குட்டி மட்டுமே. அந்தப் படம் தற்போது முடிவடைந்து நேற்று ரிலீஸாகியுள்ளது. அதேபோல ஆயிரத்தில் ஒருவரும் ரிலீஸாகியுள்ளது.
இருவருமே இந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படங்கள் கை கொடுத்தால்தான் தொடர்ந்து இருவரும் கோலிவுட்டில் நடிக்க முடியும் என்ற நிலை.
அதேபோல திரிஷாவும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை எதிர்பார்த்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது.
அதேபோல நயனதாராவும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை எதிர்பார்த்துள்ளார். ஆர்யாவுடன் இதில் ஜோடி போட்டுள்ளார். பிரபுதேவா மேட்டரால் ரொம்பவே டேமேஜ் ஆகிப் போய்க் கிடக்கிறது நயனதாராவின் பெயர். இதை தூக்கி நிறுத்த பாஸ் வந்துதான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை நயனதாராவுக்கு. இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகிறது.
தமிழ்த் திரையுலக நாயகிகள் குறித்து திரையுலகைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், 2010ம் ஆண்டு பல முன்னணி நடிகைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆண்டாக அமையும்.
ஹீரோக்களைப் பொருத்தமட்டில் தொடர்ந்து படங்கள் பிளாப் ஆனால் கூட பிரச்சினை இருக்காது. காரணம் இது ஆணாதிக்கம் அதிகம் உள்ள துறை.
அதேசமயம், ஒரு ஹீரோயினுக்கு அப்படி இல்லை. ஒரு படம் அல்லது 2 படம் தோல்வி அடைந்தால் ராசியில்லாத நாயகியாக முத்திரை குத்தி பேக்கப் செய்து விடுவார்கள்.
அடுத்த சில மாதங்களில் கமல்ஹாசன், அஜீத், விஜய், சூர்யா ஆகியோரின் புதுப்படங்களின் ஷூட்டிங்குகள் தொடங்கவுள்ளன.
தற்போது திரையுலகில் ஹீரோயின்களுக்குப் பஞ்சம் உள்ளது. இதனால் பழைய ஹீரோயின்களுக்குப் பதில் புதிய ஹீரோயின்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். தீபிகா படுகோண், காத்ரீனா கைப், கரீனா கபூர் ஆகியோரைக் கூட அணுகியுள்ளனர் சிலர். ஆனால் அவர்கள் வர மறுப்பதாக கூறப்படுகிறது.
எனவே தமன்னாவுக்கு இப்போது நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஷ்ரியா, ரீம்மா, நயனதாரா ஆகியோரின் படங்கள் ஹிட் அடித்தால் இவர்களுக்கும் டிமாண்ட் மீண்டும் கூடும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மூன்று நாயகிகளும் தங்களது படங்களை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
தற்போதைய போட்டியில் தமன்னா முதலிடத்தில் இருந்தாலும் கூட ஏற்கனவே ஹிட் அடித்த அனுபவம் உடைய திரிஷா, ஷ்ரியா, நயனதாரா, ரீம்மா ஆகியோரின் படங்கள் சூப்பர் ஹிட் ஆனால் மறுபடியும் இவர்கள் டாப்புக்கு வரக் கூடும் என்றார்.
Comments
Post a Comment