பாலுமகேந்திராவுக்கும், அகிலா பாலுமகேந்திராவுக்கும் விருதை சமர்ப்பிக்கிறேன் - பாலா



எனக்கு கிடைத்துள்ள இந்த முதல் தேசிய விருதை என்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும், தாயாக இருந்து என்னைப் பராமரித்த அகிலா பாலு மகேந்திராவுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று இயக்குநர் பாலா உருக்கமாக கூறியுள்ளார்.

நான்கு படங்களை இயக்கியுள்ள பாலா, தனது நான்காவது படத்தில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

விருது குறித்த தகவல் கிடைத்ததும் இதுகுறித்து கருத்து தெரிவித்தார் பாலா.

அப்போது அவர் கூறுகையில், என்னை வளர்த்து ஆளாக்கிய பாலுமகேந்திரா மற்றும் எனக்குத் தாயாக இருந்து பார்த்துக் கொண்ட அகிலா பாலு மகேந்திராவுமே இந்த விருது கிடைக்க காரணம். எனவே எனக்குக் கிடைத்துள்ள இந்த முதல் தேசிய விருதை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.

நான் கடவுள் படத்துக்காக இசைஞானி இளையராஜா, ஆர்யா, பூஜா ஆகியோருக்கும் நிச்சயம் விருதுகள் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவர்களுக்குக் கிடைக்காதது எனக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

விருதுகளைக் குறி வைத்து நான் படங்களை இயக்குவதில்லை. விருதுகள் கிடைத்தால் சந்தோஷப்படுவேன். கிடைக்காவிட்டால் வருத்தப்பட மாட்டேன் என்றார் பாலா.

Comments

Most Recent