பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரிதான் பிருந்தா. இவரும் ஒரு டான்ஸ் மாஸ...
பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரிதான் பிருந்தா. இவரும் ஒரு டான்ஸ் மாஸ்டர். இவர்களது சகோதரி கிரிஜாவின் கணவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராம்.
நடனப் பரம்பரையைச் சேர்ந்த பிருந்தாவுக்கும், 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த கஜு பரமேஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பிருந்தாவுக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டுமே ஆண் குழந்தைகளாம். இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதால், அதிலும் இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால் பிருந்தா பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.
குழந்தைகளைக் கீழே கூட விடாமல் மடியிலேயே கிடத்தி மகிழ்ச்சியோடு குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து வருகிறாராம்.
Comments
Post a Comment