நடிப்புக்கு நயன்தாரா தற்காலிக ஓய்வு?நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, நடிப்பு கேரியரும் சரி... பலமான ஆட்டங்கண்டு போயுள்ளது. இதனால் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துள்ள நயன், இன்னும் சில மாதங்களுக்கு எந்தப் படத்திலும் நடிப்பதில்லை (வாய்ப்பும் இல்லை!) என முடிவெடுத்துள்ளாராம்.

ஆரம்பத்தில் கும்மென்ற கேரள அழகியாகக் காட்சி தந்த நயன்தாரா, போகப் போக மெலிந்து, களையிழந்து காட்சியளிக்கத் தொடங்கினார்.

இதனால் அவருடன் நடிக்கும் ஹீரோக்களைவிட வயதானவராகத் தெரிந்தார் நயன்தாரா. இந்த நிலையில் தமிழில் சமீப காலத்தில் அவர் நடித்த எல்லாப் படங்களும் ஊத்திக் கொண்டன.

இப்போது ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டுமே நடிக்கிறார் நயன்தாரா.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக அடூர்ஸ் என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படமும் சுமாராகத்தான் போகிறது.

மலையாளத்தில் நடித்த பாடிகார்ட் படமும் பெரிதாகப் பேசப்படவில்லை.

எனவே நடிப்புக்கு கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்துவிட்டு, உடம்பில் கிளாமரை ஏற்றும் முயற்சியில் இறங்கத் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.

அவருக்கு ப்ரியமானவரும் இதுதான் சரியான முடிவு என்று கூறிவிட்டதால், சொந்த ஊரான கேரளா சென்று புத்துணர்வு சிகிச்சைக்கு தயாராகிவிட்டாராம் நயன்.

Comments

Most Recent