'ரீ- மிக்ஸ்' ரசிகர்களின் தலையெழுத்து: இளையராஜா


சென்னை, ஜன. 5: ரீமிக்ஸ் பாடல்களை கேட்பது ரசிகர்களின் தலையெழுத்து என்றார் இளையராஜா.
÷மலேசியாவின் பிரபல அகி என்ற இசை நிறுவனம் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்புகளின் உரிமத்தைப் பெற்றுள்ளது.
÷இதன்படி இளையராஜாவின் பின்னணி இசை, பாடல்கள் உள்ளிட்டவற்றைப் பெற அகி நிறுவனத்தின் அனுமதி முக்கியமாகிறது.
÷இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. அதில் இளையராஜா கூறியது:
÷ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே வெளிவந்து விட்டது. உரிமை இல்லாதவர்கள் உரிமையைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. எது சட்டம்; எது சட்ட மீறல் என்பது எல்லோருக்கும் தெரியும். தயாரிப்பாளர்களும், பிற இசையமைப்பாளர்களும் என்னுடைய பின்னணி இசையையோ அல்லது பாடல்களையோ பயன்படுத்த இனி அகி நிறுவனத்தின் அனுமதியைப் பெற வேண்டும். எனது பாடல்களின் அனைத்து பயன்பாடுகள் சார்ந்த அனுமதியை அகி மியூசிக் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறேன். இதன்படி 2000}ம் ஆண்டுக்கு முந்தைய எனது இசையமைப்புகளை எல்லா படிவங்களிலும், எல்லா வகைகளிலும் உலக அளவில் விநியோகிக்கும் உரிமை அவர்களை சேருகிறது என்றார்.
÷பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், திரைப் பாடல்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இசையமைப்பாளர்கள் இடையே போட்டி இல்லை. யாரும் யாருக்கும் போட்டி இல்லை. அகி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த உரிமைக்கு எந்தவித குறிப்பிட்ட காரணமும் இல்லை என்றார்.
÷ரீ- மிக்ஸ் பாடல்கள் அதிகரித்து வருவது பற்றிய கேள்விக்கு ""அதை கேட்பது உங்களின் தலையெழுத்து, அதை நீங்கள் கேட்டுதான் ஆக வேண்டும்'' என்றார்.
÷அகி நிறுவனத்தின் உரிமையாளர் அகிலன் உள்ளிட்ட நிறுவன பொறுப்பாளர்கள் அப்போது உடனிருந்தனர்.

Comments

Most Recent