விவாகரத்து வழக்கு: நடிகை விந்தியா நீதிமன்றத்தில் ஆஜர்


சென்னை, ஜன. 6: விவாகரத்து வழக்கில் நடிகை விந்தியா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.

÷சங்கமம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகை விந்தியா.

÷இவர் தொழிலதிபர் கோபி என்ற கோபி கிருஷ்ணா என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

÷இந்த நிலையில், விவாகரத்து வழங்கக் கோரி இவரது கணவர், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு 2008}ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.

÷இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடிகை விந்தியா ஆஜரானார்.

÷நீதிபதி முகம்மது இசாத் அலி, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 2}ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Comments

Most Recent