சிம்புவுக்கும் தமிழ் மீடியாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். மன்மதன் படத்துக்காக அவர் நயந்தாராவின் இதழ்களோடு இதழ் வைத்து இணைந்த ஃபோ...
அந்த கோபத்தில் சிம்புவின் வல்லவன் படத்தை விமர்சனம் என்ற பெயரில் நார் நாராகக் கிழிக்க சிலிர்த்த சிம்பு, முதல்முதலாக 80 லட்சம் கொடுத்து வாங்கிய பிஎம் டபிள்யூ காரைப் பற்றி உண்மையை எழுதினாலும் சிம்புக்கு வந்தது முக்கு நுனியில் கோபம். இதற்கெல்லாம் உச்சமாக இளம் சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் போட்டுக்கொள்ளப் போவதாக சிம்பு சொன்னதை ஒரு பிடி பிடித்துவிட இப்படி தன்னை மட்டுமே மீடியா கழுகு கண்களோடு பார்த்துக்கொண்டிருப்பதாக டென்ஷன் ஆன சிம்புவுக்கு கிடைத்திருக்கிறது ஒரு அட்வஞ்சர் கேரக்டர்.
எந்த துறையை சிம்பு வெறுக்கிறாரோ அதே துறையில் சிம்பு வேலை செய்வது போல ‘கோ’ படத்தில் அவரது ஹீரோ கேரக்டரை அமைத்திருக்கிறார் கே.வி. ஆனந்த். அப்படி என்ன கேரக்டர் அது. கோ படத்தில் ஒரு பிரபலமான பத்திரிக்கையின் போட்டோ ஜர்னலிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் அரசியலில் நுழைந்து எப்படி அதிரடி பண்ணுகிறார் என்பதை மையமாகக் கொண்டு கோ படத்தின் திரைக்கதையை படைத்திருக்கிறார்களாம் கே.வி. ஆனந்த், மற்றும் எழுத்தாளர் சுபா டீம்.
கே.வி. ஆனந்த் சினிமாவில் நுழைவற்க்கு முன்பு கல்கி வீக்லி. இந்தியா டுடே தமிழ், அவுட்லுக் வீக்லி, ஆகிய வார இதழ்களில் ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக ஐந்து வருடங்கள் வேலைசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அனுபவங்களில் இருந்தே சிம்பு கேரக்டரை படைத்திருகிறாராம் கே.வி. ஆனந்த்.
என்னதான் போட்டொ ஜர்னலிஸ்டாக இருந்தாலும், கதாநாயகியோடு குத்தாடம் போட்டுதானே ஆகவேண்டும். அந்த குத்தாட்டதை படமாக்க சீனாபுறப்பட்டுப் போய் இருக்கிறது கோ படக்குழு.
கோ படம் வெளியானதும் சிம்பு “ உண்மையான பத்திரிகையாளன் எப்படி இருக்கனும்ன்னு கோ படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க” என்று மீடியாவை கட்டாயம் திட்டுவர்.. வேண்டுமானல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment