Entertainment
›
Cine News
›
புத்தகங்கள் மூலமே மக்கள் எண்ணத்தை அறியலாம்: திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
சென்னை, ஜன. 4: புத்தகங்களைப் படிப்பதன் மூலமே மக்களின் எண்ணங்களையும், மண்ணின் உண்மைத் தன்மையையும் அறியமுடியும் என திரைப்பட இயக்குநர் மகேந்தி...
சென்னை, ஜன. 4: புத்தகங்களைப் படிப்பதன் மூலமே மக்களின் எண்ணங்களையும், மண்ணின் உண்மைத் தன்மையையும் அறியமுடியும் என திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கூறினார்.
÷சிவன் எழுதிய திரைச்சிற்பிகள் நூல் முதல் பிரதியை சென்னை புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் பேசியதாவது:
÷நான் அதிகமாக புத்தகம் படிப்பேன். அதன் மூலமே மக்களின் எண்ணங்களையும், மண்ணைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
÷சிவன் எழுதிய நூலைப் படித்தபோதுதான் என்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்வது எவ்வளவு தவறு எனத் தெரிகிறது. உண்மையான, நேர்மையான திரைப்படத்தை எடுத்தவர் சத்யஜித் ரே மட்டும்தான்.
÷இந்தியத் திரையுலகம் தற்போது மிகமிக பிற்போக்கான நிலையிலே உள்ளது. காதலிப்போர் மரத்தைச் சுற்றி பாடி ஆடுவதாக காட்சிகள் வருவதும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதுமான நிலையில் நம்நாட்டில் எப்படி திரைப்படம் முன்னேறும்?
÷சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் நாடு எப்படியோ அப்படித்தான் திரைப்படமும் என்று கூறிவிட்டு ஒதுங்கிடமுடியாது.
÷ஆண்டு முழுதும் குப்பையாக காட்சியளிக்கும் வீடு பொங்கல் திருநாள் வந்ததும் சுத்தமாக காட்சியளிக்கிறது. அதுபோல தமிழ்த் திரையுலகமும் அவ்வப்போது சுத்தமாகிறது. தனிப்பட்ட மனிதரின் பெருமை உலக அளவில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெருமை சேர்க்குமோ?
எனவே புதிய திரைப்பட உலகம் பிரகாசிக்க வேண்டும் எனில் நல்ல நூல்களை திரைப்படத் துறையினர் படிக்க வேண்டும்.
÷திரைப்படத் துறையினர் நம்மிடமிருந்துதான் வருகிறார்கள். அவர்களை ஏன் வினோதமாக அதிசயமாகப் பார்க்க வேண்டும்? அவர்கள் எதார்த்தமாக இருப்பது கூடத் தவறு என்ற சூழலே இங்கு நிலவுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார்.
÷நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதாவது:
÷எந்தப் படைப்பும் முழுக்க முழுக்க அசலாக இருக்க முடியாது. எனக்குள் பாரதி, புதுமைப்பித்தன்,சத்யஜித் ரே, மெüனி ஆகியோர் இருக்கும்போது நான் எப்படி அவர்களை விலக்குவேன்?
÷நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் அவர்களது தாக்கம் இன்றி என்ன செய்துவிட முடியும் என்றார்.
÷நிகழ்ச்சியில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆவணப் பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், நிறுவன சிறுபான்மை சமூகப் புரட்சி இயக்கம் கா.லியாகத் அலிகான் உள்ளிட்டோர் பேசினர். கவிதா பப்ளிகேஷன்ஸ் சொ.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நூலாசிரியர் சிவன் ஏற்புரையாற்றினார்.
Comments
Post a Comment