"நான்தானா அது... நம்பவே முடியவில்லை... அத்தனை அழகாக என்னைத் திரையில் காட்டியவர் செல்வராகவன் மட்டும்தான்" என்று செல்வராகவன் மீது பு...
"நான்தானா அது... நம்பவே முடியவில்லை... அத்தனை அழகாக என்னைத் திரையில் காட்டியவர் செல்வராகவன் மட்டும்தான்" என்று செல்வராகவன் மீது புகழாரத்தை சூட்டி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறார் ரீ்ம்மா.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பில்ட் அப் தரும் விதமாக அந்தப் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து பேட்டிகள் தந்து வருகிறார்கள். இதற்கு முன் தேடிப்போனாலும் கிடைக்காத நடிகைகளும் தேடி வந்து பேட்டி தருகிறார்கள்.
நடிகை ரீம்மா தந்த அப்படியொரு பேட்டி இது:
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக நான் 3 ஆண்டுகள் படங்களைத் தியாகம் செய்தேன். அதற்கு பலன் கிடைத்துவிட்டது.
இனி என் கேரியரே வேறு. கவர்ச்சியும் நடிப்பும் கலந்த ஆயிரத்தில் ஒருவன் பாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் நான் மிக அழகாக காட்சியளிப்பதாக அனைவரும் சொல்கிறார்கள். எனக்கே கூட அப்படித்தான் தெரிகிறது. இதுவரை யாரும் என்னை இந்த அளவு அழகாகக் காட்டியதில்லை. செல்வராகவன்தான் இதற்குக் காரணம்.
எனக்குத் திருமணமா என்று கேட்கிறார்கள்...
நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அட்லீஸ்ட் இன்னும் ஓரிரு ஆண்டுகளாவது கல்யாணம் பற்றி சிந்திக்காமல் நிறைய நடிக்க ஆசைப்படுகிறேன். அதன்பிறகு பார்க்கலாம்" என்கிறார் ரீம்மா.
Comments
Post a Comment