இது உண்மையாக இருக்குமா... என்ற சந்தேகமெல்லாம வேண்டாம். 100 சதவிகிதம் உண்மையான சமாச்சாரம். முன்பு ஆப்தமித்ரா என்று படம் எடுத்தார் இயக்குநர் ப...
இது உண்மையாக இருக்குமா... என்ற சந்தேகமெல்லாம வேண்டாம். 100 சதவிகிதம் உண்மையான சமாச்சாரம்.
முன்பு ஆப்தமித்ரா என்று படம் எடுத்தார் இயக்குநர் பி வாசு. அந்தப் படத்தின் நாயகி சௌந்தர்யா அகாலமாக இறந்து போக, நிஜமாகவே நஷ்டப்பட்டது கலையுலகம். அந்தப் படம்தான் சந்திரமுகி. ரஜினிக்கு மிக நெருங்கிய நடிகை சௌந்தர்யா என்பது நினைவிருக்கலாம்.
அடுத்து ஆப்தரக்ஷகா என்று அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து, படம் முடியும் தறுவாயில் மரணத்தைத் தழுவினார் விஷ்ணுவர்தன். படத்தின் நாயகன் இவர். அது மட்டுமல்ல, ரஜினிக்கு நெருங்கிய நண்பர்.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தமிழில் செய்யலாமா வேண்டாமா என்று கூறுகிறேன். அதுவரை எதுவும் இதைப் பற்றி வெளியில் பேச வேண்டாம் என்றுதான் ரஜினி வாசுவிடம் சொல்லியிருந்தாராம்.
ஆனால் விஷ்ணுவர்தன் மறைவுச் செய்தி வந்ததும் இடிந்துபோன ரஜினி, தனது நெருங்கிய நண்பனின் இறுதி ஊர்வலத்துக்கும் கூட போகாமல் சென்னையிலேயே இருந்துள்ளார்.
பின்னர் தன்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுவர்தன் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்த வாசுவிடம், "இந்தப் படத்தை நாம தமிழ்ல பண்ண வேண்டாம் வாசு. இப்படியொரு எண்ணத்தையே ட்ராப் பண்ணிடுங்க.." என்றாராம்.
தனக்கு வேண்டியவர்களிடம் இந்த விஷயத்தை வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிறாராம் வாசு.
Comments
Post a Comment