பிகினி அணிந்து மட்டும் நடிக்கவே மாட்டேன்-வித்யா பாலன்

சினிமாவில் பிகினி அணிந்து நடிக்க மாட்டேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார் வித்யா பாலன்.

பிபாஷா பாசு பிகினி அணிந்துள்ளார். பிரியங்கா சோப்ரா கூட அணிந்து நடித்தார். ஏன் ராணி முகர்ஜி கூட பிகினியைத் தொட்டுப் பார்த்த விட்டார். இந்த நிலையில் வித்யா பாலனும் அப்படி நடிப்பாரா என்ற ஆர்வம் பாலிவுட்டில் பல்கிப் பெருகி வருகிறது.

ஆனால் தலையை படு வேகமாக 'இங்கிட்டும் அங்கிட்டுமாக' ஆட்டி முடியவே முடியாது என்று கூறுகிறார் வித்யா பாலன்.

இஷ்கியா படத்தில் அவர் நடித்துள்ள துணிச்சலான கவர்ச்சி மற்றும் காமப் பாத்திரம் பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்து அவர் கையில் எடுக்கப் போவது பிகினியைத்தான் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது. ஆனால் நடிப்புதான் தனது பலம் என்று கூறுகிறார் பாலன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கண்ணை உறுத்தும் கவர்ச்சிக்கு எதிரானவள். பா படத்திலும் சரி, இஷ்கியா படத்திலும் சரி சேலைகளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

இஷ்கியா படத்தில் நான் அணிந்து நடித்த சேலைகள் அனைத்துமே வெகு சிறப்பானவை. அப்படத்துக்காகவும், புரமோஷனுக்காகவுமே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை.

உண்மையில் எனக்கு சேலை ரொம்பப் பிடிக்கும். அதில்தான் நமது உண்மையான அழகு தெரியும். அது எனக்கு சவுகரியமாகவும் இருக்கிறது. மற்றபடி பிகினி எல்லாம் தேவையில்லாத காம எண்ணங்களைத்தான் தூண்டி விடும். அப்படிச் செய்வது தவறு என்கிறார் படு பொறுப்பாக.

Comments

Most Recent