கரீனாவுக்கு வந்த வைர நகை பார்சல்!



பாலிவுட் கவர்ச்சிக் கன்னி கரீனா கபூருக்கு தங்கம், வைர நகைககள் அடங்கிய மர்மப் பார்சல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட்டின் சைஸ் ஜீரோ நாயகி கரீனா கபூர். சைப் அலிகானை காதலித்து வருகிறார். ஐஸ்வர்யா ராயை பின்னுக்குத் தள்ளி விட்டு பாலிவுட்டில் முன்னணியில் நிற்கிறார். விளம்பரப் படங்களிலும் இவர்தான் தற்போது லீடிங். இவரது சம்பளம் ரூ. 2 கோடி.

மும்பையில் உள்ள கரீனா கபூரின் வீட்டுக்கு ஒரு மர்மப் பார்சல் வந்துள்ளது. அப்போது கரீனா வீட்டில் இல்லை. வெளிநாடு போயிருந்தார்.

அவரது உதவியாளர் பார்சலைப் பிரித்து பார்த்தபோது, அதில் ஏராளமான தங்க, வைர நகைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்றும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை ஒன்றும் அதில் இருந்தது. ஒரு கடிதமும் வைக்கப்பட்டு இருந்தது.

அதில், நான் உங்கள் தீவிர ரசிகன். துபாயில் இருந்து இந்த நகைகளை வாங்கி அனுப்பியுள்ளேன். அடுத்த படத்தில் இந்த நகைகளை அணிந்து நீங்கள் நடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றி உடனடியாக கரீனாகபூரை தொடர்பு கொண்டு உதவியாளர் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த கரீனா, உடனடியாக அந்த பார்சலையும், நகைகளையும் போலீஸாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸாரிடம் இது ஒப்படைக்கப்பட்டது. இதை அனுப்பியது யார் என்று போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Most Recent