விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா!கணவர் கோபி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார் நடிகை விந்தியா.

சங்கமம் படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகையாக இருந்தவர் விந்தியா.

இவர் 2007ம் ஆண்டு முன்பு கோபி என்ற கோபி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் இவர்.

ஆனால் திருமணமான சொற்ப தினங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துவிட்டதால், விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கோபி.

ஆனால் இதற்கு விந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. கணவனுடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டு தனது தாம்பத்ய உரிமையை மீட்டுத்தர வேண்டும் என்று விந்தியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிக்குன்குனியா...

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல முதன்மை கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விந்தியாவும், அவரது கணவரும் அழைக்கப்பட்டனர்.

நீதிபதி முகமது இசாத் அலி முன்பு விந்தியா ஆஜரானார். ஆனால் கோபி வரவில்லை. சிக்குன்குனியா நோயால் அவதிப்படுவதால் கோபியால் வர முடியவில்லை என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

முந்தைய விசாரணைக்கு கோபி வந்த போது கோர்ட்டில் விந்தியா ஆஜராகவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, இருவரும் அடுத்தமுறை கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Comments

Most Recent