இன்று முதல் குலசேகரனும் கூலிப்படையும்வடிவேலு, பிரகாஷ் ராஜ், நட்ராஜ், பிரம்மானந்தம், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் குலசேகரனும் கூலிப்படையும் படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் ஒலிப்பதிவுடன் தொடங்கியது.

எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் உஷா வெங்கட்ரமணி, கெளசல்யா மணி தயாரிக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தில் கீர்த்தி சாவ்லா, உதயதாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜி.சிவா. ராஜசேகர் ஒளிப்பதிவு, தோட்டாதரணி கலை, விடி விஜயன் எடிட்டிங், சண்டைக்கு சூப்பர் சுப்பராயன் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

படத்தில் ராஜ்கபூர், தியாகு, ஆனந்த் உள்ளிட்டோரும் இடம் பெறுகின்றனர்.

புழுகுமூட்டை பொன்னம்பலம் என்ற கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் வைகைப் புயல் வடிவேலு வருகிறார்.

வித்தியாசமான கதைக் களத்துடன் காமெடி கலந்து இப்படத்தைக் கொடுக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் பூஜையும், பாடல் ஒலிப்பதிவும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

திரையுலகப் பிரமுகர்கள் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.

Comments

Most Recent