போதை..முதியவரை உதைத்த பாபிலோனா அண்ணன் கைதுசென்னை கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அண்ணன் குடித்து விட்டு, முதியவர் ஒருவரை இடித்துத் தள்ளி அடித்து உதைத்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

கவர்ச்சி நடிகை மாயாவின் சொந்தக்காரப் பெண்தான் நடிகை பாபிலோனா. மாயாவைப் போல பாபிலோனாவும் கவர்ச்சிகரமாக நடித்து வருபவர்.

பாபிலோனாவின் குடும்பத்தினர் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது.

பாபிலோனாவுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவரது பெயர் விக்கி. இவர் மீது வடபழனி, விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து இவர் அடிதடிச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். பலமுறை போலீஸார் எச்சரித்தும் திருந்தியபாடில்லை. குடித்து விட்டு ரகளை செய்வது, வம்பு செய்வது என்று தொடர்ந்து ஒரு ரவுடி கணக்காக
செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், வடபழனி பெருமாள் கோவில் தெருவில் பால் வாங்கிக்கொண்டு வந்த முதியவர் அருணாசலம் என்பவரை அடித்துத் தள்ளியுள்ளார் விக்கி. அவரை மிரட்டவும் செய்தார்.

இதுகுறித்து போலீஸாருக்குப் புகார் போனது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் விக்கியை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரை பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அடிதடி வழக்குகளில் அவர் சிக்கி வருவதால் குண்டர் சட்டத்தை அவர் மீது பிரயோகித்து உள்ளே தள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Comments

Most Recent