ராவண ரகசியம்


மணிரத்னம் இயக்கத்தில் "ராவணன்' படத்தை முடித்து விட்டு சமுத்திரகனியின் இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகும் "சம்போ சிவசம்போ' படத்தில் பிஸியாக இருக்கிறார் பிரியாமணி.

""மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என ஒவ்வொரு நடிகைக்கும் கனவு இருக்கும். அந்தக் கனவு எனக்கும் இருந்தது. அது "ராவணன்' மூலம் நிறைவேறியதில் மகிழ்ச்சி. படத்தில் என் கேரக்டர் என்ன என்பதைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அது மிகவும் ரகசியமானது. நிச்சயம் படத்தை எல்லோரும் ரசிப்பார்கள். அபிஷேக், விக்ரம், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். "நினைத்தாலே இனிக்கும்' மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்ற வாய்ப்புகள் எப்போதாவதுதான் அமைகிறது. நிச்சயம் அந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்கிறேன். "நாடோடிகள்' ரீமேக் ஆன "சம்போ சிவசம்போ' கன்னடப் படமும் "நாடோடிகள்' மாதிரி பெரிய வெற்றி பெறும். தென்னிந்திய மொழிகளில் ஆறு மொழிகள் எனக்கு தெரியும். அதனால் அத்தனை  மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது'' என்கிறார் பிரியாமணி.

Comments

Most Recent