பூஜாவை முன்பு போல திரைப்படங்களில் காண முடிவதில்லை. இதுகுறித்து கேட்டால் பூடகமாகப் பேசுகிறார். நான் கடவுள்தான் பூஜா நடித்து வந்த கடைசித் தமிழ...
பூஜாவை முன்பு போல திரைப்படங்களில் காண முடிவதில்லை. இதுகுறித்து கேட்டால் பூடகமாகப் பேசுகிறார்.
நான் கடவுள்தான் பூஜா நடித்து வந்த கடைசித் தமிழ்ப் படம். அதற்குப் பிறகு பூஜாவை ஒரு படத்திலும் காண முடியவில்லை. அவர் எந்தப் படத்திலும் நடிப்பதாகவும் தெரியவில்லை.
அதை விட முக்கியமாக இப்போது அவரை இந்தியாவிலும் கூட அதிகம் காண முடியவில்லை. தாய் மண்ணான இலங்கையிலேயே அதிகம் இருக்கிறாராம்.
இதுகுறித்து பூஜாவிடம் கேட்டால், இலங்கையிலேயே அதிக நேரத்தை இப்போது நான் செலவிடுகிறேன். எனக்கு ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாக வதந்திகள் கிளம்புகின்றன. அதுவல்ல உண்மை.
நான் எதையும் ரகசியமாக செய்பவள் அல்ல. எது செய்தாலும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
இலங்கையில் அதிக நேரத்தை செலவிடுவதால் அடிக்கடி என்னால் பெங்களூருக்கோ, சென்னைக்கோ வர முடியவில்லை. அதுதான் நான் படங்களில் அதிகம் நடிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்கிறார் பூஜா.
இலங்கையிலேயே அதிக நேரத்தைக் கழிப்பதாக கூறும் பூஜா அதற்கான காரணத்தை விளக்கவில்லை. ஒருவேளை சிங்களப் படங்களுக்கு அதிக முக்கியத்துவதம் தரத் தொடங்கி விட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. சமீபத்தில் 2 சிங்களப் படங்களில் பூஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment