தமிழ் தயாரிப்பாளர்கள் வேண்டும்: ஃபெப்சி' தலைவர் வி.சி.குகநாதன்


"ஒரு காலத்தில் சினிமாவை முழுமையும் ஆட்சி செய்தது தமிழ் தயாரிப்பாளர்கள்தான். தமிழ் தயாரிப்பாளர்கள் சினிமாவில் இருந்த காலங்களில்தான், தமிழ் கலாசாரமும், தமிழர்களின் வாழ்க்கை முறையும், மொழிப் பற்றும் சரியாக பதிவு செய்யப்பட்டது. மொழி தெரியாதவர்கள் தமிழ் சினிமா எடுக்க வந்த போது, கலாசாரம் திரிக்கப்பட்டது என்று கூறலாம். நம் மொழியை, பண்பாட்டை, வாழ்க்கை முறையை சரியாக பதிவு செய்ய வேண்டுமானால், தமிழ் தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிக்க வர வேண்டும். அப்போதுதான் சினிமா பழைய தன்மையை அடையும். ஒரு கதையை உள்வாங்கி அதை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் போது அதை தயாரிப்பவர் அந்த கதையின் கலாசாரத்தில் வாழ்ந்தவரா? என்பதுதான் முக்கியம். எனவே தரமான தமிழ் சினிமா உருவாக வேண்டுமானால் தமிழ் தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும்.' அண்மையில் நடைபெற்ற "பழகியதே பிரிவதற்கா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவ்வாறு வேண்டுகோள் வைத்தார் "ஃபெப்சி' தலைவர் வி.சி.குகநாதன்.

Comments

Most Recent