தெலுங்கானா-நயன் படம் ஓடும் தியேட்டர்களில் கலாட்டா!



தெலுங்கானாவை ஆதரிக்காத ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள அடூர்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர், தெலுங்கானா மாணவர்கள் மற்றும் டிஆர்எஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தெலுங்கானா பகுதியில் இந்தப் படம் ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வாரங்கல்லில் உள்ள ராம், விஜயா ஆகிய தியேட்டர்கள் முன்பு தெலுங்கானா தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் தெலுங்கானாவை ஆதரிக்காத ஜூனியர் என்.டி.ஆர். ஓழிக என்று கோஷம் போட்டனர்.

பின்னர் தியேட்டர்களில் புகுந்து ரகளை செய்தனர். இதனால் பயந்துபோன தியேட்டர் ஊழியர்கள் படத்தை நிறுத்தினர். படம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் பயந்து போய் அலறிக் கொண்டு ஓடினர்.

இதே போல் கரீம்நகரில் உள்ள சீனிவாசா தியேட்டரிலும் ஜூனியர் என்.டி. ஆரின் அதுர்ஷ் படம் நிறுத்தப்பட்டது. இதனால் இப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் ஓடக் கூடாது என்றும், மீறி ஓடினால் தியேட்டர்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் மாணவர்களும், டிஆர்எஸ் கட்சியினரும் மிரட்டியுள்ளதால், திரையுலகினர் திகைத்து நிற்கின்றனர்.

Comments

Most Recent