கிளா​ம​ருக்கு நான் பொறுப்​பில்லை


கி​ரிக்​கெட்,​​ கிளா​மர் என அடிக்​கடி மீடி​யா​வில் மிதப்​ப​வர் லட்​சு​மி​ராய்.​ கன்​ன​டம்,​​ தமிழ்,​​ தெலுங்கு என பய​ணித்த இவர்,​​ இப்​போது மலை​யாள சினி​மா​வின் முன்​னணி நாய​கர்​க​ளு​டன் ஜோடி சேர்ந்​தி​ருக்​கி​றார்.​

மலையாள வாய்ப்புகள்...

எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு நடித்து வருகிறேன். இதில் அந்த மொழி வாய்ப்பு, இந்த மொழி வாய்ப்பு எனப் பார்க்க எனக்கு நேரமில்லை. சொந்த மொழியான கன்னடத்தில்தான் சினிமா பிரவேசம் செய்தேன். ஆனால் அங்கு கண்டு கொள்ள ஆள் இல்லை. அதன் பின்தான் தமிழில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பிரபலமானேன். இப்போது மலையாளத்துக்குச் சென்றிருக்கிறேன். கமர்ஷியலாக எங்கு வேண்டுமானலும் ஜெயிக்கலாம்.  மம்முட்டி, மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிக்கிறேன்.

சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி....

அதுதான் மலையாள சினிமா. மற்ற சினிமாக்களைப் போல் அல்லாமல் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள் அங்குதான் நிறைய இருக்கின்றன. மற்ற மொழி சினிமாக்களில் எல்லாம் பிரபலமான ஹீரோயின் மட்டும்தான் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியும். இப்படி ஒரு விதி விலக்கு மலையாள சினிமாவில் இல்லை. பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேருவதில் ஒன்றும் பயமில்லை. சுலபத்தில் பெரிய பெயரை வாங்கி விடுவேன்.

ஹிந்தி சினிமா....

ஹிந்தியில் அடுத்த ஆண்டின் மத்தியில் நடிக்கிறேன். அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. கதை கேட்டாகி விட்டது. ஹிந்தி சினிமாவின் இளம் ஹீரோ ஒருவருடன் ஜோடி சேருகிறேன். போட்டோ செஷன் எல்லாம் முடிந்தாகி விட்டது. ஹிந்தி சினிமாதான் எல்லா நடிகைகளுக்கும் தற்போதைய கனவாக இருக்கிறது என்பது உண்மைதான். சில வருடங்களுக்கு முன் இருந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. எந்த மொழி நடிகையும் ஹிந்தி சினிமாவுக்குப் போகலாம். நானும் போயிருக்கிறேன். அவ்வளவுதான்.

தமிழில் கிளாமர் இமேஜ்....

அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அது என்னுடைய தவறு இல்லை. என்னைப் பயன்படுத்திய கதைகளின் தவறு அது. நான் கிளாமராக மட்டும்தான் நடிப்பேன் என்று எப்போதும் சொல்லியது கிடையாது. கிளாமரை மாற்றிக் கொள்ள யாரும் கதை செய்யவில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்' அந்தக் குறையை தமிழில் போக்கி விடலாம். லட்சுமிராயை நடிக்கவும் வைக்க முடியும் என்ற நம்பிக்கை யாருக்காவது இருந்தால் அதற்கு நான் ஒத்துப் போவேன்.

அதிக விளம்பரங்கள்...

சினிமாவைவிட விளம்பரங்கள்தான் எங்களை அதிகம் பிரபலபடுத்துவதாகக் கருதுகிறேன். சினிமா பிடிக்காதவர்கள் கூட விளம்பரங்களை ரசிக்க வாய்ப்புகள் உண்டு. விளம்பரங்கள் எல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். அதிக விளம்பர வாய்ப்புகள் எனக்குக் கிடைப்பதால் நடிக்கிறேன். அதே போல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் அதிகம்.

தோனி...?

தோனியும் நானும் எப்போதும் நண்பர்கள்தான். எப்போதும் போலவே எங்கள் நட்பு தொடர்கிறது. கிரிக்கெட்டில் வெற்றி பெறும் போதெல்லாம் நிச்சயம் வாழ்த்து சொல்வேன். அவரும் என்னை நலம் விசாரிப்பார். தோனியுடனான நட்பு என்றைக்கும் தொடரும்.

Comments

Most Recent