சௌந்தர்யா ரஜினியின் துணிச்சல் முடிவு!கோவா படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா.

பெரும் பட அதிபர்களே தயங்கும் ஒரு முடிவை துணிச்சலாக மேற்கொண்டுள்ளார் சௌந்தர்யா. இவரது ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பான கோவா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருந்தார். ஆனால் படத்தை வாங்க பல ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை.

எனவே பட வெளியீட்டை ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதற்கிடையே, சன் பிக்ஸர்ஸ் இந்தப் படத்தை வெளியிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை மட்டும் வாங்கிக் கொண்ட சன், படத்தை தங்களால் வெளியிட முடியாது என ஒதுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

நிலையை தந்தையுடன் கலந்து ஆலோசித்த சௌந்தர்யா, பின்னர் தனியாகவே இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதற்கு ரஜினியின் ஆசியும் உண்டாம். மகளுக்காக, தமிழகத்தின் மிகச் சிறந்த திரையரங்குகளை பெற்றுத் தந்துள்ளார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தின் விளம்பரம் மற்றும் செய்திகளை ஒழுங்குபடுத்தத் தவறியதாலேயே இந்த நிலை என்று கூறப்படுகிறது. படம் குறித்து தொடர்ந்து வெளியான எதிர்மறைச் செய்திகளே இப்படியொரு இக்கட்டைத் தோற்றுவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இந்தப் படத்துடன் சிம்பு தேவன் இயக்கிய இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent