ஆயிரத்தில் ஒருவன் திருட்டு டிவிடி.. போலீஸில் கார்த்தி புகார்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் திருட்டு டிவிடி தெருத் தெருவாக விற்கப்படுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்தும்படியும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தந்தார் நடிகர் கார்த்தி.

நடிகர் கார்த்தி, கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த படம் இணையதளங்களில் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. வெளியில் திருட்டு டிவிடியாகவும் 15 ரூபாய்க்கே கிடைக்கிறது.

இந்த திருட்டு டிவிடி விற்பனையை தடுக்குமாறு கமிஷனரிடம் கார்த்தியும், படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரனும் கேட்டுக் கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் கார்த்தி கூறியது:

"எங்களின் இரண்டரை ஆண்டு கடும் உழைப்பு ஆயிரத்தில் ஒருவன். தமிழ் மக்கள் இந்தப் படத்தை 100 ரூபாய் செலவழித்து தியேட்டரில் போய் பார்க்க வேண்டும். 15 ரூபாய் செலவழித்து திருட்டு விசிடியில் பார்த்து விடாதீர்கள். திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுத்துள்ள தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும்.." என்றார்.

Comments

Most Recent