வித்தியாசமான அரங்கில் விக்ரம்


விக்ரம்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "24' படத்தின் படப்பிடிப்பு, ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. விக்ரம், இலியானா நடித்து வருகிறார்கள். குகை மாதிரி அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான அரங்கில் விக்ரம் பங்கேற்று வருகிறார். இப்படத்துக்காக இலியானாவுக்கு இதுவரை இல்லாத தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் விக்ரம் பங்கேற்று நடித்து வருகிறார். இப்படத்துக்கான இசையமைப்பாளர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. செல்வராகவன் } யுவன் இடையேயான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதால் யுவனே இப்படத்துக்கு இசையமைப்பார் எனத் தெரிகிறது.

Comments

Most Recent