பா படத்துக்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது16வது வருடாந்திர ஸ்கிரீன் விருது வழங்கும் விழாவில் பா படத்தில் சிறப்பாக நடித்த அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. ஆமிர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் சிறந்த படமாக தேர்வானது.

மும்பையில் 16வது வருடாந்திர ஸ்கிரீன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராகவும், பா படத்தில் அமிதாப் பச்சனின் தாயார் வேடத்தில் நடித்திருந்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.

இதுதவிர 3 இடியட்ஸ் படம் சிறந்த படமாகவும், அதன் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணிக்கு சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்தன.

பா படத்தில் நடித்த அருந்ததி நாக் சிறந்த துணை நடிகையாகவும், பிரதிக் சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பிரதிக் பா படத்தில் அமிதாப்பச்சனின் தோழனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent