காணாமல் போன நடிகை காதலன் வீட்டில் கண்டுபிடிப்புகாணாமல் போன நெல்லு பட நாயகி ருக்சனா அவரது காதலன் வீட்டில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி குன்னத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லு என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் 2-வது கதாநாயகியாக ருக்சனா நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நடிகை ருக்சனா மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ருக்சனாவின் காட்சிகள் எடுக்க முடியாமல் படப்பிடிப்பும் தடைபட்டது.

இதுகுறித்து படப்பிடிப்பு குழுவின் மேலாளர் ஈஸ்வரன் கோபி போலீசில் புகார் செய்தார். அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் மாயமான நடிகை ருக்சனாவுக்கும் கேரள மாநிலம் கண்ணனூரைச்சேர்ந்த தொழில் அதிபர் சரத்குமார் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகவும், காதலனுடன் ருக்சனா ஓடி விட்டதாகவும் கூறப்பட்டது.

கோபி போலீசார் கேரளா மாநிலம் சென்று மாயமான நடிகை ருக்சனாவை தேடி வந்தனர்.

கண்ணனூரில் ருக்சனா, அவரது காதலன் வீட்டில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு ருக்சனா, 'நான் நடிக்க வேண்டிய காட்சிகளை ஜனவரி மாதம் வந்து நடித்து கொடுத்து விடுகிறேன். இப்போது என்னை சுதந்திரமாக விடுங்கள்' என்று கூறிவிட்டாராம்.

Comments

Most Recent