Entertainment
›
Cine News
›
சூப்பர் ஸ்டார் சிரிச்சா நம்ம மொத்த தமிழ் ரசிகர்களும் சிரிச்ச மாதிரி - வெங்கட் பிரபு
கிட்டதிட்ட நொந்தே போய்விட்டார் கோவா பட இயக்குனர் வெங்கட் பிரபு. ஒரு வழியாக கடன்காரர்களை எல்லாம் சமாளித்து, ரிலீசுக்கு நாள் குறித்தால் மீ...
கிட்டதிட்ட நொந்தே போய்விட்டார் கோவா பட இயக்குனர் வெங்கட் பிரபு. ஒரு வழியாக கடன்காரர்களை எல்லாம் சமாளித்து, ரிலீசுக்கு நாள் குறித்தால் மீண்டும் ஒரு இரண்டு கோடி கடன்காரர், “ என்னோட துட்டை வைக்காமல் கோவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது” என்று உயர்நீதி மன்றத்துக்குப் போய் விட்டார்.
அவர் பிரபல தமிழ் சினிமா நிதியாளர் கமலேஷ். அடக்கடவுளே எத்தனை பேர்கிட்டதான் கோவாண்ணு சொல்லி பணம் புரட்டுனீங்க! பேசாமல் ரஜினி பேரச்சொல்லி பொது பங்கு வெளியீடே செய்திருக்கலாமே என்று சொல்லி புலம்புகிறார்கள் கோடம்பாக்கத்து நிதியாளர்கள்.
கடைசி கட்ட பிரமோ வேலைகளில் பிஸியாக இருந்த வெங்கட் பிரபு இப்போது இந்த இரண்டு கோடி விவகாரத்தை சமாளிக்க நேரடியாக ரஜினியையே அணுகியிருகிறாராம். படம் அறிவித்தபடி வருமா வராதா என்ற இத்தனை நெருக்கடிக்கு நடுவிலும் கோவா படத்தை ரசிகர்கள் மட்டுமல்ல கோடாம்பாக்கமும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருக்கிறது. சென்னை-28, சரோஜா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு கோவாவையும் வெற்றிப்படமாக தந்து ஹாட்ரிக் அடிப்பாரா என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றியே தீருவது என்று கங்கனம் கட்டிக்கொண்டு உழைத்திருக்கிறாராம் வெங்கட் பிரபு. தொலைபேசி வழியாக 4தமிழ் மீடியா வாசகர்களுக்காக உற்சாகம் பொங்க, இதுபற்றி சில சுவையான தகவல்களைப் நம்முடன் பகிர்ந்து கொண்டார் வெங்கட்பிரபு.
"அது என்னங்க கோவா.." என்று நாம் தொடங்கவே உற்சாகமாகத் தொடர்ந்தார்...
“கோவா என்ற சுற்றுலா தலத்தை பாலிவுட்காரர்கள் கதைக்களமாக நிறைய படங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் படத்தில் இதுவரை முழு நீள கதைகளமாக யாரும் பயன்படுத்த வில்லை. அப்படியொரு புத்திசாலித்தனத்துக்குள் புத்தியை செலுத்தியபோதுதான் கோவாவின் கதையே சிக்கியது. நான் பள்ளியில் படிக்கிறபோது கோவாவுக்கு சுற்றுலா செல்வது ஒரு பெரிய கனவாகவே இருந்தது. அதற்கு காரணம் கோவாவின் கொள்ளை அழகு. அந்த கடற்கரையின் அழகைப் போலவே அங்கு சுற்றுலா வரும் பெண்களும் அழகாக இருக்கிறார்களே! ஆடைக்கும் கலாச்சாரத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிற நம்ம நாட்டில், பிகினியில் இங்கே பெண்கள் இவ்வளவு சுதந்திரமாக அலைகிறார்கள்! இங்கு மட்டும் எப்படி இவ்வளவு சுதந்திரம் கிடைக்கிறது என்று சிந்தித்திருக்கிறேன். ஒரு யூனியன் பிரதேசம்மாக மட்டும் கோவாவைப் பார்க்காமல் விதவிதமான மனிதர்கள் சங்கமிக்கும் ஒரு கடற்கரை முற்றமாக என் கண்களுக்கு கோவா தெரிந்தது. இப்படிபட்ட கோவாவுக்கு சுற்றுலா வரும் நண்பர்களின் நட்புக்கு வரும் சோதனைதான் கோவா படத்தின் கதைக்கரு."
"ஜெய், பிரேம்ஜி இருவரும் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகும் ஃபைனால் இயர் கல்லூரி மாணவர்கள். எக்ஸாம் முடித்துவிட்டு வேலையில் சேரும் முன்பு தனது வேறு சில நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு கோவாவுக்கு டூர் வருகிறார்கள். வந்த இடத்தில் அங்கே இவர்களைப்போல சுற்றுலா வந்த சில சிறகு முளைக்காத தேவதைகள் மீது இவர்கள் பார்வை விழுகிறது. அவர்களின் அறிமுகம் கிடைத்த பிறகு நண்பர்களின் நட்புக்கு வைக்கப்படும் சோதனையை காதல், மோதல், காமெடி மூன்றையும் சரியான கலவையில் கலந்து காட்டியிருக்கிறேன்” என்கிறார்.
“முக்கியமாக முதல் இரண்டு படங்களிலும் பரபர விறுவிறு என்று ஓடிய அதே வேகத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நட்பு, காதல், இரண்டும் பல சமயங்களில் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது என்பதைச் சொல்ல வருகிறேன். ரஜினி சார் ரஷ் பார்த்து விட்டு உடல் குலுங்கச் சிரித்ததை மறக்க முடியாது. சூப்பர் ஸ்டார் சிரிச்சா நம்ம மொத்த தமிழ் ரசிகர்களும் சிரிச்ச மாதிரி” என்று சொல்லி சிரிக்கும் வெங்கட் பிரபுவிடம் அடுத்தது? என்றோம். மீண்டும் தம்பி பிரேம்ஜியை தனி நாயகனாக இயக்க இருகிறேன்” என்று முடித்துக்கொண்டார். கையில ஒரு ஹீரோ இருக்கும் போது எதுக்கு அஜித் விஜய்ன்னு அலையனும்? கலக்குங்க வெங்கட்!

Comments
Post a Comment