Entertainment
›
Cine News
›
இலக்கியத் துறையுடன் இணைந்தால் தமிழ் சினிமாவுக்கு தனி இடம் கிடைக்கும்: கமல்
சென்னை, ஜன. 3: இலக்கியத் துறையுடன் இணைந்து செயல்பட்டால், உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு தனி இடம் கிடைக்...
சென்னை, ஜன. 3: இலக்கியத் துறையுடன் இணைந்து செயல்பட்டால், உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு தனி இடம் கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.சென்னையில் நடைபெறும் 33}வது புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை "சினிமாவும் இலக்கியமும்' என்ற பொருளில் அவர் ஆற்றிய சிறப்புரை:இலக்கியத்துக்கும், திரைத் துறைக்கும் பாலம் அமைக்க கூவிவருகிறேன். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதுபோல இலக்கியம், திரைத் துறை சார்ந்தவர்கள் இணைந்து செயல்பட தயக்கம் காட்டி வருகின்றனர்.இருந்தாலும், இலக்கியம், திரைத் துறை என்ற இரு கரைகளுக்கும் இடையே பாலம் கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்.ஒன்று தெரிந்தால், மற்றொன்று தெரியத் தேவையில்லை என்றே திரைத் துறையினரும், இலக்கியத் துறையினரும் நினைக்கின்றனர்.திரைத் துறையினர் சினிமாவே இலக்கியம் என்கின்றனர். இலக்கியவாதிகளோ, பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்த நாங்கள் எதற்கு சினிமாவைக் கற்க வேண்டும் எனக் கேட்கின்றனர்.சினிமா என்ற புதிய வாகனம் வந்துள்ளது. அதை வைத்து வேகமாக ஓடலாம் என இலக்கியவாதிகளிடம் கூறினால், அதில் போய் கீழே விழவா என்கிறார்கள்.ஆனால், எனக்குத் தெரிந்தது எல்லாம் சினிமாதான். தமிழை இப்போதுதான் கற்றுவருகிறேன். புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் கூட்டம் கூடியிருப்பது சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது.எனது சினிமாக்கள் வித்தியாசப்படுவதற்கு இலக்கிய எழுத்துகளே காரணம். அவை என் எழுத்தல்ல. மற்றவர்கள் எழுதியவைதான்.சினிமா பார்ப்பவர்கள் புத்தகம் வாசிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் சினிமா சரியில்லை என்று கருத்து கூறும் அளவுக்கு தெளிவு பெறமுடியும். அந்தக் கடமை உங்களுக்கு உள்ளது.திரைத் துறையினரும், இலக்கியத் துறையினரும் தற்போது வேறு வேறு அரிசியில் அப்பியாசம் எழுதும் நிலையிலே உள்ளனர். மக்கள் பேசும் மொழியுடன் சேராதவரை சினிமா ஊமையாகவே இருக்கும்.சினிமா வியாபாரம் சேர்ந்த கலவை. அது அற்புதமானது என்பதுடன் அபாயகரமானதாகவும் உள்ளது. எனவே இலக்கியத்தை சினிமாவுடன் இணைப்பது சுலபமல்ல.÷இத்தகைய முயற்சிக்கு யார் முன்னால் செல்வது என்ற கேள்வி எழுகிறது. எனவே இரு துறையினரும் சேர்ந்து செயல்படவேண்டும் என்றார்.÷நிகழ்ச்சியில் வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "அன்பே சிவம் புதிய முயற்சி. வியாபார ரீதியாக அப்படம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இணையதளத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இது காலம் தாழ்ந்த பலனைத் தந்துள்ளது' என்றார்.÷மேலும், விலைவாசி உயர்வால் "மருதநாயகம்' படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ள போதிலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் நடிகர் கமலஹாசன். உடன் (இடமிருந்து) அலையன்ஸ் பதிப்பக உரிமையாளர் ஸ்ரீனிவாசன், கவிதா பதிப்பக உரிம
Comments
Post a Comment