ஷங்கர் துவங்கிய இணையத்தளம்!



இணையதளம் துவங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தளத்தில் இதுவரை வெளி வராத ரஜினியின் எந்திரன் ஸ்டில்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.

எந்திரன் குறித்த எந்த படங்கள் மற்றும் செய்திகளையும் சன் பிக்சர்ஸ் மீடியாவுக்கு தராத நிலையில், இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர்.

இதுகுறித்து அவர் தளத்தில், "லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் தொடர்ந்து எந்திரனுக்குத் தேவைப்படுகிறது. இதனால் என்னைப் பற்றி, எனது படங்கள் பற்றி, அது குறித்த சந்தேகங்கள் கேட்க விரும்பும் சினிமா விரும்பிகளுடன் பேசக் கூட நேரமில்லை.

எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த வலைப்பூவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்... நேரமிருக்கும் போது பதில் தருகிறேன்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

இணையதள உலகுக்கு ஷங்கரை வரவேற்போம்!

Comments

Most Recent