ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்-வாழ்த்துக்கள்!



ஆஸ்கர் நாயகன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான 'நம்ம ஆளு' ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று 44 வது பிறந்த நாள்.

கடந்த ஆண்டு முழுக்க ரஹ்மான் இசையமைத்து தமிழில் எந்த படமும் வெளியாகவில்லை. ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை தமிழர்கள் பூரிப்புடன் கொண்டாடி மகிழ்ந்ததில், அவரது இசை ஆல்பம் வராத குறை கூட தெரியவில்லை. அதே நேரம் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அசத்தினார் ரஹ்மான்.

ஆனால் இந்த ஆண்டு அதற்கு வட்டியும் முதலுமாக வரிசையாக அவரது இசை விருந்து காத்திருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா, எந்திரன், ராவண், புலி... இப்படி எல்லாமே மெகா விருந்துதான்.

இவை எல்லாமே இந்த தமிழ் மண்ணோடு நின்றுவிடாமல், அகிலம் முழுவதும் ஆளப் போகின்றன என்பதில் தமிழருக்கு கூடுதல் பெருமை.

போன வருடம் ரஹ்மான் தனது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, ஆஸ்கர் விருது பெறும் தருவாயிலிருந்தார்... இந்த ஆண்டு?

ஆஸ்கருக்கு நிகரான கிராமி விருது பெறும் சூழலில் உள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், அவர் பெறப்போகும் கிராமிக்கும் அட்வான்ஸாக வாழ்த்தி வைப்போம்!

வாழ்த்துக்களை அனுப்ப....

Comments

Most Recent