சார்மிக்கு திருமணம்!தமிழில் அறிமுகமாகி, தெலுங்கில் செக்ஸி நடிகை என்ற புகழைப் பெற்ற சார்மிக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.

பஞ்சாபைச் சேர்ந்த தொழில் அதிபரை மணக்கிறார் அவர். சார்மியின் சொந்த மாநிலமும் பஞ்சாப்தான்.

தமிழில் டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் சார்மி.

காதல் கிசுகிசு, லாடம், லட்சியம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்குப் படங்கலில் கவர்ச்சியின் எல்லையையே காட்டியவர் சார்மி.

நடித்தது அலுத்துப் போனதால், இப்போது திருமணத்துக்குத் தயாராகிறார். பஞ்சாபைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு கழுத்தை நீட்டப் போகிறாராம். இது ஒரு காதல் திருமணமும் கூட.

இருவரும் கடந்த இரு வருடங்களாக ரகசியமாக காதலித்து வருகிறார்களாம். இருவரின் பெற்றோருக்கும் சமீபத்தில் காதல் விஷயம் தெரியவந்ததும், அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.

கைவசம் உள்ள தெலுங்கு படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் சார்மி. விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம்.

Comments

Most Recent