சினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள்

'ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?' - சினிமாக்காரர்களை அதிரவைத்த கோட்டை நிருபர்கள்

திருட்டு விசிடிக்கெதிராக நடவடிக்கை கோரி, ரஜினி, கமல் மற்றும் சரத் போன்றவர்கள் கோட்டைக்குப் போய் முதல்வரிடம் மனு கொடுத்துவிட்டு வந்தபோது, நிருபர்களைச் சந்திக்க விரும்பினர்.

அங்கிருந்தவர்கள் சினிமா நிருபர்கள் அல்ல... திரையுலகினரின் விருப்பம்போல கேள்வி கேட்க.

தாங்கள் வந்ததன் நோக்கம் குறித்து விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்த சரத் குமாரை இடைமறித்த நிருபர்கள், 'ஏன் அடிக்கடி இப்படி அரசாங்கத்தை தொந்தரவு செய்கிறீர்கள்... மக்களுக்கு வேறு பிரச்சனைகளே இல்லையா?' என்றார் தலைமைச் செயலகத்ததில் சீரியஸ் விவகாரங்களை கையாளும் ஒரு நிருபர். ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் திகைத்துப் போனார்கள்.

சினிமா நிருபர்கள் என்றால் அவர்களை திரையுலகினர் தான் கேள்வி கேட்பார்கள். கோட்டையில் இருக்கும் நிருபர்கள் அரசியல்-பொது விவரங்களை கரைத்துக் குடிததவர்கள். மிக சீரியசான ஜர்னலிஸ்டுகள். அவர்கள் கேட்கும் கேள்விகளால் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளே திணறுவார்கள்.

இப்படி நிருபர்கள் சீரவே, சரத்குமார் இப்படிச் சமாளித்தார்:

அடிக்கடி, முதல்வரை நாங்கள் சந்தித்து தொல்லை செய்வதாக கேட்கிறீர்கள். நாங்கள் திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதியே முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து வருகிறோம் என்றார்.

இதற்கு முன் எத்தனையோ படங்களுக்கு திருட்டு டிவிடி வந்தபோது நீங்கள் இத்தனை வேகம் காட்டவில்லையே. ஜக்குபாய் உங்கள் சொந்தப் படம் என்பதால்தானே இப்போது இப்படியெல்லாம் போராடுகிறீர்கள்? என்றார் இன்னொரு நிருபர்.

அடடா.. இது வேற ஜர்னலிசம் என்பதை உணர்ந்து அதற்கு மேல் நிற்கக் கூட திராணியற்றவர்களாய், இடத்தைக் காலி செய்தனர் திரையுலகினர்.

Comments

Most Recent