புது தில்லி, ஜன. 5: தவறான வகையில் இடம்பெற்றிருந்த இந்திய வரைபடங்களை ஒளிபரப்பிய "நேஷனல் ஜியோகிராபிக்' தொலைக்...
புது தில்லி, ஜன. 5: தவறான வகையில் இடம்பெற்றிருந்த இந்திய வரைபடங்களை ஒளிபரப்பிய "நேஷனல் ஜியோகிராபிக்' தொலைக்காட்சி சானலுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி "தெற்காசியாவில் காண்டாமிருகம்' என்ற நிகழ்ச்சியின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள வரைபடத்தை தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பியது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பாக தவறான வரைபடத்தை வெளியிட்ட தொலைக்காட்சி அலைவரிசைக்கு விளக்கம் கேட்டு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. எனினும் விளக்கத்தில் திருப்தி அடையாததால் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.
Comments
Post a Comment