'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்!கமல்ஹாசன் - கேஎஸ் ரவிக்குமார் இணையும் புதிய படத்துக்கு யாவரும் கேளிர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் இது.

கமல் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நாயகி யார் என்பதில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் நடிக்க கமலுக்கு சம்பளமாக ரூ 12 கோடி வரை பேசப்பட்டிருப்பதாக ரெட்ஜெயன்ட் வட்டாராம் கூறுகிறது.

இந்தப் படத்துடன் தொடர்புடைய இன்னொரு முக்கிய செய்தி...

ரெட்ஜெயன்ட் இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் உதயநிதிதான் இதன் நாயகன்.

படத்தை இயக்கப் போகிறவர்.. மிஷ்கின். கமல்ஹாசனின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்குவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மிஷ்கினுக்கு உதயநிதியின் படத்தை கமல்ஹாசனே பெற்றுத் தந்து 'தங்கக் கைக்குலுக்கலை' மேற்கொண்டுள்ளார்.

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் உள்ளது. அதை தட்ஸ் தமிழ்தான் தனது வாசகர்களுக்கு முதல் முறையாக வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent