சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!தேவையில்லாமல் தேன்கூட்டில் கல்லெறியும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் கவுதம் மேனன்.

முன்பு லிங்குசாமி மற்றிம் விக்ரமை மிகவும் மட்டமாக விமர்சித்துப் பேசியவர், இப்போது தமிழ் சினிமாவின் 'ட்ரெண்ட் செட்டர்'களான அமீர் மற்றும் சசிகுமாரைத் தாக்கிப் பேட்டியளித்துள்ளார்.

ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "எனக்கு சுப்பிரமணியபுரம் படமோ, சசிகுமாரின் இயக்கமோ எதுவும் கவரவில்லை. ஓகே பரவால்ல என்று சொல்லும் ரகம்தான் அந்தப் படம். ஆனால் அந்தப் படத்தில் அவ்வளவு ரத்தம், வன்முறை எதற்கு... அதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

இப்படி ஒரு படத்தை கொடுத்த சசிகுமாரை ஒரு நல்ல இயக்குநராக பார்க்க முடியவில்லை..." என்று கூறியுள்ளார்.

அமீர் பற்றி இதே பேட்டியில் இப்படிச் சொல்கிறார் கவுதம் மேனன்:

"அமீரின் யோகி படம் மிகத் தவறானது. பிரபலமான ஒரு படத்தை அப்படியே அவர் காப்பியடித்தது தவறு", என்று இந்த 'யோக்கியசிகாமணி' பேசியிருப்பது கோலிவுட்டில் கடும் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே லிங்குசாமிக்கு இயக்கத் தெரியவில்லை என்றும், விக்ரம் சிறந்த நடிகரே இல்லை என்றும் சொன்னவர்தான் கவுதம் மேனன்.

Comments

Most Recent