அடுத்த ஆண்டு முதல் அவார்டு படங்கள் மற்றும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பார் விஜய் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். திண்ட...
அடுத்த ஆண்டு முதல் அவார்டு படங்கள் மற்றும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பார் விஜய் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே காமராஜர் சாகர் அணைக்கட்டில் நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்புக்காக, இயக்குநர் சந்திரசேகர் வந்திருந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "ரஜினியின் பார்முலாவைத்தான் விஜய் பின்பற்றுகிறார். ரஜினியின் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள். அதேபோல், என் மகன் விஜய் படங்களும் வசூலில் வெற்றி பெற்று வருகின்றன.
விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை. வேட்டைக்காரன் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் வித்தியாசமான படங்களில், வேடங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறார். 2011ம் ஆண்டுக்குப் பிறகே விஜய் நடிக்கும் அவார்டு படங்கள் தயாரிக்கப்படும் என்றார் அவர்.
Comments
Post a Comment