உதயநிதியிடம் விண்ணைத்தாண்டி வருவாயா...!



கவுதம் வாசுதேவ மேனன் தயாரித்து இயக்கி வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கேரளாவின் மிக அழகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு இயல்பான காதல் கதை ஆகும்.

சிம்பு-த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் ஆகியுள்ளதால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த சூழலில் இந்தப் படத்தின் இந்திய திரையிடல் உரிமைகளை முழுமையாக வாங்கியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ். இதற்காக மிகப் பெரிய தொகை கைமாறியிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ள விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வியாபார 'டாக்' சாதகமாக இருப்பதாலேயே இந்தப் படத்தை பெரும் விலைக்கு வாங்கினாராம் உதயநிதி.

கவுதம் மேனன் ஏற்கெனவே வாரணம் ஆயிரம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படத்தை கடைசி நேரத்தில் முக அழகிரியின் மகன் தயாநிதிக்கு பெரும் விலைக்கு விற்றார். ஆனால் அந்தப் படம் வர்த்தக ரீதியாக தயாநிதிக்கு நஷ்டத்தை ஏர்படுத்தியது குறிப்பிடத்தக்கது

Comments

Most Recent