ஹன்சிகாவும், தேவி ஸ்ரீபிரசாத்தும்?கோலிவுட் மறறும் டோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு - ஹன்சிகா மோத்வானியும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தும் காதலிப்பதாக பேச்சு எழுந்துள்ளதுதான்.

ஹீரோக்களுக்கு இணையாக இப்போது தேவி ஸ்ரீபிரசாத்தும் கிசுகிசுக்களில் இடம் பெற்று வருகிறார். முதலில் நடிகை மமதா மோகன்தாஸுடன் மிகத் தீவிரமாக இணைத்துப் பேசினார்கள்.

அதற்கேற்ப கிட்டத்தட்ட தெலுங்கிலேயே செட்டிலாகியிருந்தார் மமதா. தேவிஸ்ரீபிரசாத்தின் இசையமைப்பில் பாடல்களையும் பாடி வந்தார்.

தமிழில் கூட வில்லு படத்தில் தனது இசையில் மமதாவை ஒரு பாடலுக்கு பாட வைத்திருந்தார் தேவி. இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வாதனியுடன் தேவியை இணைத்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து தேவியிடமே கேட்டதற்கு, பிரபலமாக இருந்தால் இப்படியெல்லாம் வதந்திகளை சந்தித்துதான் ஆக
வேண்டும். மமதா எனது தெலுங்குப் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். பிலிம்பேர் விருதும் கிடைத்தது. பின்னர் எனது சில படங்களில் பாடினார்.

அதில் வில்லு படத்தில் இடம் பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லே பாடல் சூப்பர் ஹிட் ஆனது. எனது படங்களில் தொடர்ந்து பாடி வருவதால் இருவரையும்இணைத்துப் பேச ஆரம்பித்தனர். ஆனால் எங்களுக்குள் எதுவும் இல்லை.

இப்போது ஹன்சிகா மோத்வானியுடன் இணைத்துப் பேசுகின்றனர். அவரை ஒரு ஸ்டார் நைட்டில் வைத்துதான் பார்த்தேன். அதில் நான் கச்சேரி செய்தேன். சில நிமிடங்கள் இருவரும் பேசியிருப்போம். அவ்வளவுதான். வேறொன்றுமில்லை என்கிறார் தேவி.

அவ்வளவேதானா...?

Comments

Most Recent