இலக்​கி​யத் துறை​யு​டன் இணைந்​தால் தமிழ் சினி​மா​வுக்கு தனி இடம்:​ கமல்


சென்னை, ​​ ஜன.​ 3: இலக்​கி​யத் துறை​யு​டன் இணைந்து செயல்​பட்​டால்,​​ உலக அள​வில் தமிழ் சினி​மா​வுக்கு தனி இடம் கிடைக்​கும் என்று நடி​கர் கமல்​ஹா​சன் கூறி​னார்.​சென்​னை​யில் நடை​பெ​றும் 33}வது புத்​த​கக் கண்​காட்​சி​யின் 5-வது நாளான ஞாயிற்​றுக்​கி​ழமை மாலை "சினி​மா​வும் இலக்​கி​ய​மும்' என்ற பொரு​ளில் அவர் ஆற்​றிய சிறப்​புரை:​இ ​லக்​கி​யத்​துக்​கும்,​​ திரைத் துறைக்​கும் பாலம் அமைக்க கூவி​வ​ரு​கி​றேன்.


தூங்​கு​ப​வர்​களை எழுப்​ப​லாம்.​ தூங்​கு​வ​து​போல நடிப்​ப​வர்​களை எழுப்ப முடி​யாது என்​ப​து​போல இலக்​கி​யம்,​​ திரைத் துறை சார்ந்​த​வர்​கள் இணைந்து செயல்​பட தயக்​கம் காட்டி வரு​கின்​ற​னர்.​இ ​ருந்​தா​லும்,​​ இலக்​கி​யம்,​​ திரைத் துறை என்ற இரு கரை​க​ளுக்​கும் இடையே பாலம் கட்​டும் முயற்​சி​யில் தொடர்ந்து ஈடு​பட்​டு​வ​ரு​கி​றோம்.​ஒன்று தெரிந்​தால்,​​ மற்​றொன்று தெரி​யத் தேவை​யில்லை என்றே திரைத் துறை​யி​ன​ரும்,​​ இலக்​கி​யத் துறை​யி​ன​ரும் நினைக்​கின்​ற​னர்.


தி ​ரைத் துறை​யி​னர் சினி​மாவே இலக்​கி​யம் என்​கின்​ற​னர்.​ இலக்​கி​ய​வா​தி​களோ,​​ பழந்​த​மிழ் இலக்​கி​யத்​தைக் கற்​றுத் தேர்ந்த நாங்​கள் எதற்கு சினி​மா​வைக் கற்க வேண்​டும் எனக் கேட்​கின்​ற​னர்.​சி ​னிமா என்ற புதிய வாக​னம் வந்​துள்​ளது.​ அதை வைத்து வேக​மாக ஓட​லாம் என இலக்​கி​ய​வா​தி​க​ளி​டம் கூறி​னால்,​​ அதில் போய் கீழே விழவா என்​கி​றார்​கள்.​ஆ​னால்,​​ எனக்​குத் தெரிந்​தது எல்​லாம் சினி​மா​தான்.​ தமிழை இப்​போ​து​தான் கற்​று​வ​ரு​கி​றேன்.​ புத்​த​கத் திரு​விழா நிகழ்ச்​சி​யில் கூட்​டம் கூடி​யி​ருப்​பது சந்​தோ​ஷ​மா​க​வும்,​​ பெரு​மை​யா​க​வும் உள்​ளது.​எ​னது சினி​மாக்​கள் வித்​தி​யா​சப்​ப​டு​வ​தற்கு இலக்​கிய எழுத்​து​களே கார​ணம்.​ அவை என் எழுத்​தல்ல.​ மற்​ற​வர்​கள் எழு​தி​ய​வை​தான்.


சி ​னிமா பார்ப்​ப​வர்​கள் புத்​த​கம் வாசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​க​வேண்​டும்.​ அப்​போ​து​தான் சினிமா சரி​யில்லை என்று கருத்து கூறும் அள​வுக்கு தெளிவு பெற​மு​டி​யும்.​ அந்​தக் கடமை உங்​க​ளுக்கு உள்​ளது.​தி​ரைத் துறை​யி​ன​ரும்,​​ இலக்​கி​யத் துறை​யி​ன​ரும் தற்​போது வேறு வேறு அரி​சி​யில் அப்​பி​யா​சம் எழு​தும் நிலை​யிலே உள்​ள​னர்.​ மக்​கள் பேசும் மொழி​யு​டன் சேரா​த​வரை சினிமா ஊமை​யா​கவே இருக்​கும்.​சி ​னிமா வியா​பா​ரம் சேர்ந்த கலவை.​ அது அற்​பு​த​மா​னது என்​ப​து​டன் அபா​ய​க​ர​மா​ன​தா​க​வும் உள்​ளது.


எனவே இலக்​கி​யத்தை சினி​மா​வு​டன் இணைப்​பது சுல​ப​மல்ல.​÷இத்​த​கைய முயற்​சிக்கு யார் முன்​னால் செல்​வது என்ற கேள்வி எழு​கி​றது.​ எனவே இரு துறை​யி​ன​ரும் சேர்ந்து செயல்​ப​ட​வேண்​டும் என்​றார்.​÷நி​கழ்ச்​சி​யில் வாச​கர்​கள் கேள்​விக்கு பதி​ல​ளித்த கமல்​ஹா​சன்,​​ "அன்பே சிவம் புதிய முயற்சி.


வியா​பார ரீதி​யாக அப்​ப​டம் விமர்​சிக்​கப்​பட்​டி​ருக்​க​லாம்.​ ஆனால்,​​ இணை​ய​த​ளத்​தில் அதி​க​மாக விமர்​சிக்​கப்​பட்​டுள்​ளது.​ இது காலம் தாழ்ந்த பல​னைத் தந்​துள்​ளது' என்​றார்.​÷மே​லும்,​​ விலை​வாசி உயர்​வால் "மரு​த​நா​ய​கம்' படத்​தின் பட்​ஜெட் அதி​க​ரித்​துள்ள போதி​லும் விரை​வில் படப்​பி​டிப்பு தொடங்​கும் என்று நம்​பிக்கை தெரி​வித்​தார்.​​​ சென்னை புத்​த​கக் காட்​சி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசு​கி​றார் நடி​கர் கம​ல​ஹா​சன்.​ உடன் ​(இட​மி​ருந்து)​ அலை​யன்ஸ் பதிப்​பக உரி​மை​யா​ளர் ஸ்ரீனி​வா​சன்,​​ கவிதா பதிப்​பக உரி​மை​யா​ளர் சேது.சொக்க​லிங்​கம்,​​ எழுத்​தா​ளர்​கள் அகி​லன் கண்​ணன்,​​ த.ஸ்டா​லின் குண​சே​க​ரன்.

Comments

Most Recent