மும்பை மராத்தான்- ஜொலித்த ஸ்டார்கள்



மும்பையில் இன்று நடந்த மும்பை மராத்தான் நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மும்பையில் இன்று 7வது மும்பை மராத்தான் போட்டி நடந்தது. இதில், திரையுலகைச் சேர்ந்த வித்யா பாலன், ஜெனீலியா, ராகுல் போஸ், ரித்தீஷ் தேஷ்முக், குல் பனாக், மஹிமா சவுத்ரி, ஜான் ஆப்ரகாம் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மாடல்-நடிகரான மிலிந்த் சோமன் போட்டி தூரமான 42.1 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தார். தாரா சர்மா, சோஃபி, புரப் கோஹ்லி ஆகிய நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டு ஓடினர்.

அதேபோல அனந்த் மஹிந்த்ரா உள்ளிட்ட தொழிலதிபர்களும் பங்கேற்றனர். அதேசமயம், வருடா வருடம் தவறாமல் பங்கேற்கும் அனில் அம்பானி இந்த முறை வரவில்லை.

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent