சூரியாவின் சிறுத்தையை வேட்டையாடிய விஜய், விஜயை வேட்டையாட விரும்பும் காங்கிரஸ் !

சூர்யா மீது வருமானவரித்துறை வேட்டையாடி இருக்கும் நிலையில், இதுவரையில் வெளிவராத இன்னுமொரு தகவல் தெரிய வந்துள்ளது. அதிலே சூர்யா மீது நடந்தப்ட்டுள்ள மற்றமொரு வேட்டைத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தச் சூர்ய வேட்டையில் விளையாடியவர்

இளைய தளபதி விஜய் என்பது கூடுதல் பரபரப்பு. விபரம் அறிய முனைந்த போது தெரியவந்தது வெளிவராத சில தகவல்கள்.

சூர்யாவின்  உறவினரும் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ தயாரிப்பாளருமான ஸ்டுடியோ கி‌ரீன் ஞானவேல்ராஜா மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார் என்று தகவல் வருகிறது  சூரியாவின் நட்பு வட்டத்திலிருந்து. சமீபத்தில் சூரியா வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனையில் அகரம் பவுண்டேஷன் மற்றும் சூரியாவின் தனிப்பட்ட கணக்குகளில் எந்த தவறையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியிருகிறனர் வருமாண வரித்துறையினர்.

இதை சூரியாவும்,:  கணக்குவழக்குகளில் கறாரான நேர்மையை கடைபிடித்து வரும் சிவகுமாரும் எதிர்பார்த்த்துதான் என்றாலும் தவறாமல் வருமான வரி செலுத்தி வரும் சூரியாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் இது மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு பக்கம் என்றால் வருமாணவரிச் சோதனை  நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு சென்னை சத்தியம் திரையரங்கில் தனது தயாரிப்பாளர் ஞானவேல்  ராஜாவுடன்  வேட்டைக்காரன் படத்தை பார்த்து மிகவும் நொந்து போய் இருக்கிறார். காரணம் சூரியா கைவசம் இருக்கும் ‘விக்ரமார்குடு’ தெலுங்கு ரீமேக் உரிமையை இனி குப்பையில் தூக்கிப் போடவேண்டியதுதான்  என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் சூரியா. காரணம் விக்ரமார்குடு படத்தின் மையக்கதையை ஒட்டியே வேட்டைக்காரன் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததோடு, அதிலிருந்து முக்கியமான பல காட்சிகளையும் அப்படியே வேட்டைக்காரனில் வைத்துவிட்டார்கள்.

மகாதீரா படத்தை இயக்குவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, அந்தப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ரவிதேஜா நடித்த தெலுங்குப்படம்தான் விக்ரமார்குடு ஆந்திராவில் வசூலை வாரிக் குவித்த இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை கார்த்திக்காக ஸ்டுடியோ ஸ்கிரீன் வாங்கியது.  பையா படத்துக்குப் பிறகு விக்ரமார்குடு ரீமேக்கை தொடங்குவது என்றும், அந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்குவார் எனவும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

படத்துக்கு சிறுத்தை என்று டைட்டில் வைக்கப்பட்டது. அனுஷ்கா ஹீரோயின் என்பது வரை முடிவானது. அதன் பிறகு பூபதி பாண்டியனுக்கு பதில் சுரா‌ஜ் இயக்குவார் என்று முடிவான நிலையில் படம் திடீர் என்று கைவிடப்பட்டதற்கு  காரணம் சூரியாவின் அப்பா சிவகுமார். இப்போதைக்கு இத்தனை பெரிய ஆக்‌ஷன் படம் வேண்டாம். இந்த படத்தில் சூரியா நடிப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கம் முடிந்த பிறகு விக்ரமார்குடு ரீமேக்கை தொடங்கலாம் என்ற நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் படம் கமிட் ஆனதால் அந்த படத்துக்குபிறகு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்த சூரியாவுக்கு வேட்டைக்கரான் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். காரணம் விக்ரமார்குடு ரீமேக் உரிமையை 50 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தார், இப்போது அத்தனையும் வீண். அந்த உரிமையைத் தூக்கி குப்பையில் போடவேண்டியதுதான் என்கிறார்கள் சூரியாவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து. வேட்டைக்காரன் இப்படிக்கூட கஜினியை வேட்டையாட முடியுமா என்ன! என்றால்வல்லவனுக்கு வல்லன வையகத்தில் உண்டு என்கின்றார்கள் சிலர். என்னப்பா..? என்றால் இக்கட சூடு என்று விஜயின் பஞ்ச் வசனத்திலேயெ பதில் தருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் சேருவார் என,  அரசியலில் குதிப்பார் என  சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட விஜயின் அரசியல் பிரவேசம்,  சில பல ரகசிய வேலைகளால், ஆப்ஃபாகிப்போனது. இருந்தாலும் காங்கிரஸ் தரப்பு விஜய்யை தன் பக்கம் சேர்த்துக்கொள்வதில் மனந்தளராத விக்கிரமாதித்தனாகவெ இருப்பதாக தெரிகிறது. இதற்கு  என்னப்பா ஆதாரம்னா?  விஜய்க்கு பத்மஸ்ரீ விருது தர பரிசுக்கமிட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் விஜய் பெயரும் உள்ளதாகக் கிசுகிசுக்கின்றார்கள். காங்கிரஸின் விருப்பதிற்குரியவராகவே  விஜய் இருப்பதால்   அவருக்கு இந்த விருது நிச்சயம்  கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இன்னுமொரு தகவல் சற்று வித்தியாசமாகச் சொல்கிறது. விஜயின் சுறா ரிலீசுக்கு தயாராகும் வேளையில், காங்கிரஸ் தொடர்பை திரும்பவும் புதுப்பிக்கும் இந்த  வதந்தி, சுறாவுக்கு ஆப்பு என்றும் சொல்கிறது. "ஆப்பு கண்ணுக்குத் தெரியாதில்ல.." என்பதும் விஜயின் பஞ்ச் டயலாக்தானே..?

Comments

Most Recent