சுறாவில் 'ரிங்கா ரிங்கா' குத்து!ரீமேக் விஷயத்தில் விஜய்யை அடித்துக் கொள்ள ஆளில்லை... ஜெயம் ரவி- ஜெயம் ராஜா கூட அப்புறம்தான்.

அந்த அளவு சேஃபாக விளையாட ஆசைப்படும் விஜய், இப்போது நடிக்கும் 50வது படமான சுறா கூட மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் சோட்டா மும்பையின் தழுவல்தான்.

இந்தப் படத்துக்குள் இன்னொரு ரீமேக் வேலையையும் செய்துள்ளார் விஜய். தெலுங்கில் வெளியான ஆர்யா-2 படத்தின் ஹிட் குத்து பாட்டான 'ரிங்கா ரிங்கா..'வை அப்படியே தமிழுக்கு உருவிக் கொண்டாராம். சும்மா இல்ல... பாட்டுக்கு தேவையான அளவு பணம் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் இந்தப் பாட்டுக்கு இசை தேவிஸ்ரீ பிரசாத். ஆனால் தமிழில் அதே பாட்டை மணிசர்மா ரீமிக்ஸ் பண்ணித் தருகிறாராம். தெலுங்குப் பாட்டில் பெண் குரலுக்கு முக்கியத்துவம் இருக்கும். தமிழில் அதை அப்படியே உல்டா பண்ணி விட்டார்களாம்...

ஏற்கெனவே தனது திருப்பாச்சி, சச்சின், ஆதி, குருவி, வில்லு போன்ற படங்களில் இதே வேலையைத்தான் செய்தார் விஜய்.

Comments

Most Recent