மாலையானதும் பார்ட்டி பீவரில் பார்களைத் தேடும் திரையுலகப் புள்ளிகளுக்காகவே ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார் கவர்ச்சி நடிகை சோனா. தி பார்க் ஹோட்டல...
மாலையானதும் பார்ட்டி பீவரில் பார்களைத் தேடும் திரையுலகப் புள்ளிகளுக்காகவே ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.
தி பார்க் ஹோட்டலில் நேற்று நடந்த இந்த பார்ட்டியில் சிவப்பு நிறத்தில் எப்போது அவிழ்ந்துவிடுமோ என்ற ஆபத்தான உடையை அணிந்து அனைவரையும் வரவேற்றார் சோனா. அவரது அழகு சாதன விற்பனைக் கடையான யூனிக் சார்பில் நடத்தப்பட்ட பார்ட்டி இது.
வந்தவர்களை வஞ்சனையின்றி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து தனது தாராளத்தைக் காட்டியவர், மது விருந்தையும் தானே முன்நின்று பரிமாறினார்.
இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், இசைமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், நடிகர்கள் ஜெய், கணேஷ் வெங்கட்ராம், அஸ்வின், அசோக், நடிகை சோனியா அகர்வால், விமலா ராமன், சங்கீதா என நட்சத்திரங்கள் முதலில் டாலடித்து, பார்ட்டி மப்பில் டல்லடித்தனர்.
இந்த பார்ட்டியில் சோனாவின், தொழில்ரீதியான பார்ட்னர்கள் பலர் வெளிநாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டனர். மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த தமிழ் பிரமுகர்கள் சிலரும் வந்திருந்தனர். தனது கடைக்கு இவர்கள்தான் பொருட்கள் சப்ளை செய்வதாக சோனா அறிமுகப்படுத்தி வைத்தார்.
விரைவில் தனது யூனிக் நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரிக்கப் போவதாகவும் கூறினார் சோனா.
Comments
Post a Comment