Rajini Speech Not Acceptable - Theater owners association




ரஜினி பேசியது சரியல்ல - திரையரங்க உரிமையாளர் சங்கம்

மரம் சும்மாயிருந்தாலும், காற்று அதை விடுவதே இல்லை என்றொரு கவிதை உண்டு. ரஜினி சும்மாயிருந்தாலும், வலிய வரும் வம்புகள் அவருக்கு சிக்கலையே தேடி தருகின்றன என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஜக்குபாய் விவகாரம்.

இது தொடர்பான கண்டன கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரஜினி, திரையரங்க உரிமையாளர்கள் மனமும் புண்படுகிற மாதிரி சில வார்த்தைகளை பேசிவிட்டார். திருட்டு வி.சி.டி கள் திரையரங்குகளில்தான் பதிவு செய்யப்படுகின்றன என்பதை போலிருந்தது அவரது பேச்சின் சாரம்சம்.

இதையடுத்து அவசரமாக கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ரஜினியை கண்டித்து அறிக்கை அனுப்பியுள்ளனர். விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் திருட்டு விசிடி காரர்களுக்கு துணை போவது போல பேசியிருக்கிறார் ரஜினி. எனவே அவர் இதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது அந்த அறிக்கையில்.

இதே நிகழ்ச்சியில் அவர் ஜக்குபாய் படத்தின் கதை எந்த ஆங்கில படத்திலிருந்து சுடப்பட்டது என்பதையும் வெளிப்படையாக கூறியிருந்தார் அல்லவா? அதற்கும் சேர்த்து தனது கண்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.



Comments

Most Recent