Thalamilla Raagam Latest Tamil Movie Details

[THALAMILLA-RAAGAM-movie-stills.JPG]
தாளமே இல்லாமல் பாடல்கள் – திரை இசையில் ஒரு புது முயற்சி

ஒரு பாடலாசிரியர் இயக்குநராகியிருக்கிறார் ‘ஜேம்ஸ்பாண்ட்’, ‘குருவம்மா’, ‘நாயகன்’, ‘காதலும் கற்று மற’, ‘திருதிரு’ போன்ற படங்களில் பாடல்கள் எழுதியிருப்பவர் கவிஞர் யோசி, இவர் இப்போது ‘தாளமில்லா ராகம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். ஜே.கே. ரித்திஷ். சிறப்பான முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படித்தில் நடனப் புகழ் நடிகர் ராம்ஜியும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். நாயகன் நாயகிகள் அனைவரும் புது முகங்கள்.

நான்கு இளைஞர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் கதையாக உருவாகியுள்ளன. இந்த நால்வரும் வெளிநாடு செல்லத் தீர்மானிக்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து சேர்கிறார்கள். இந்த பயணத்தில் நிகழும் சுவையான பரபரப்பான மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகளே முக்கிய காட்சிகள். அவர்கள் வெளிநாடு போய்ச் சேர்ந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ். ஏன் வெளிநாடு போகிறார்கள் என்பது விறுவிறுப்பான கேள்வி.

சன். ராஜ். கலைஞர் டிவிகளில் சூப்பர் சிங்கர்ஸாக போட்டிகளில் மூலம் வெற்றி பெற்றவர்களை தன் படத்தில் பாடவைத்திருக்கிறார் யோசி. பாடல் பதிவு நடந்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. முதன் முதலாக, உலக சினிமா வரலாற்றில் தாளமில்லாமல் பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்குத்தான். படத்தில் இடம் பெறும் பத்துப் பாடல்களுக்கும் ரிதம் அதாவது தாளம் கிடையாது. இது ஒரு புது முயற்சி.

The most frequented wonder can be a film without songs. But have you ever experienced songs unaccompanied by beats. Here’s ‘Thalamilla Raagam’ – a film that doesn’t carry instrumental beats on in any songs.‘Thalamilla Raagam’ marks the debut directorial of lyricist Yosi (written lyrics for yesteryear films James Bond, Guruvamma, Nayagan, Kadhalum Kattru Mara and Thiru Thiru).

The film comprises of newcomers in lead roles while J.K. Riteesh and choreographer Ramji have a prominent role to perform.Director Yosi states that the story revolves around 4 youngsters heading for Chennai airport from Srirangam to take their flight for foreign countries. Their journey isn’t justly brimmed with fun, emotions and romance, but off revolutionary ideas.

Do these youngsters make their way to abroad or not is what it forms crux of the story.Yosi himself has penned lyrics and turned them into melodies by offering chance to winners of various music based reality shows in satellite channels. The filmmaker boasts that it’s the first time in history of World Cinema that an entire album will not have single rhythmic beats for any songs.

Comments

Most Recent