ரஜினி மகள் செüந்தர்யா திருமணம்


நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செüந்தர்யா, சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் அஸ்வினை மணமுடிக்கவுள்ளார்.


கட்டுமான அதிபர் கே.எஸ்.வெங்கட்ராமனின் மகனான அஸ்வின், சென்னையில் என்ஜினீயரிங் படிப்பையும் அமெரிக்காவில் உயர் கல்வியும் முடித்துவிட்டு தந்தையின் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.


செüந்தர்யாவும், அஸ்வினும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி வந்தனர். நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதலை இரு வீட்டாரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.


செüந்தர்யா "ஆச்சர் ஸ்டுடியோஸ்' என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தயாரித்து வரும் "சுல்தான் தி வாரியர்' அனிமேஷன் படமும் ரஜினி நடித்து வரும் "எந்திரன்' படமும் வெளியான பிறகு செüந்தர்யா}அஸ்வின் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.


வரும் பிப்ரவரி மாதம் 17}ம் தேதி ரஜினியின் வீட்டில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.


""இது பெற்றோர் சம்மதத்துடனும், ஆசியுடனும் நடைபெறும் காதல் திருமணம். அஸ்வினை என் தந்தை உள்பட குடும்பத்தார் அனைவரும் நன்கு அறிவார்கள். என் விருப்பத்தை தந்தையிடம் கூறியவுடன், திருமணத்துக்கு உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்'' என்றார் செüந்தர்யா .

Comments

Most Recent